< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பையில் தோல்விக்கு காரணம் இது தான்? - இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர்

Image Courtesy: BCCI Twitter

கிரிக்கெட்

ஆசிய கோப்பையில் தோல்விக்கு காரணம் இது தான்? - இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
28 Sept 2022 8:32 AM IST

ஆசிய கோப்பையில் தோல்விக்கு காரணம் இது தான் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி இலக்கை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்தது.

அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த ஒரு ஆட்டத்திலும் இலக்கை கட்டுப்படுத்துவதில் அடைந்த தோல்வி தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியினர் இலக்கை கட்டுப்படுத்துவதில் ஏன் தோல்வி அடைகின்றனர் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்:-

நாங்கள் இலக்கை கட்டுப்படுத்துவதில் சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறோம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. நாங்கள் இலக்கை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்த ஒவ்வொரு ஆட்டத்திலும் அங்கு பனி பெய்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். பனி பொழிவதினால் இலக்கை எதிரணியினர் எளிதாக அடிக்கின்றனர்.

இலக்கை கட்டுப்படுத்தும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். அதனால் நான் பந்து வீச்சாளர்கள் மீது கோவம் கொள்ள மாட்டேன். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மேலும், நாங்கள் மிகச்சிறப்பாக திரும்பி வருவோம் என்றார்.

கடந்த டி-20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் ஆடியது கவலைக்க்குறிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை நாங்கள் முதலில் பேட்டிங் ஆடும் போது அணிக்கு தேவையான, அதற்கும் மேல் நாங்கள் ரன்கள் அடிக்கிறோம். எனவே, இது ஒரு பிரச்சனையாக எங்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்