< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி.யின் தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பா..? வெளியான தகவல்
கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பா..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
18 July 2024 2:20 PM IST

ஐ.சி.சி. யின் தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவி காலம் டிசம்பருடன் முடிவடைகிறது.

கொழும்பு,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ சி சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

தற்போது ஐ.சி.சி.யின் தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவி காலம் வரும் டிசம்பருடன் முடிவடைகிறது. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவுக்கு அந்த பதவி காலம் இன்னும் ஓராண்டு எஞ்சியிருக்கிறது. இந்நிலையில் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி.யின் தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு வலியுறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய் ஷா பதவி ஏற்பாரா? அல்லது பார்கிளேவின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்