கடைசி டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அயர்லாந்து..!
|அயர்லாந்து தரப்பில் ஹாரி டெக்டர் 54 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 49 ரன்களும் எடுத்தனர்.
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.
இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பர்ல் 36 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அயர்லாந்து தரப்பில் ஹாரி டெக்டர் 54 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 49 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதில் முதலாவது ஆட்டம் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.