< Back
கிரிக்கெட்
அயர்லாந்து டி20 தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான் கேப்டன்

image courtesty: ICC

கிரிக்கெட்

அயர்லாந்து டி20 தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான் கேப்டன்

தினத்தந்தி
|
14 March 2024 8:33 AM IST

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் யுஏஇ-ல் நடைபெற்று வருகின்றன. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை அயர்லாந்து கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்த ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் ரஷித் கான் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்;-

ரஷித் கான் (கேப்டன்), இப்ராகிம் சத்ரான், குர்பாஸ், செடிக் அடல், இஜாஸ் அஹ்மத்சாய், இஷாக் ரஹிமி, முகமது நபி, நங்யால் கரோடை, அஸ்மத் உமர்சாய், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், வபாதர் மொமண்ட், பரித் மாலிக், நவீன் உல் ஹக், பசல் ஹக் பரூக்கி

மேலும் செய்திகள்