< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அயர்லாந்து 319 ரன் குவிப்பு
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அயர்லாந்து 319 ரன் குவிப்பு

தினத்தந்தி
|
25 April 2023 2:04 AM IST

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.

காலே,

இலங்கை - அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.

5 ரன்னில் தனது முதலாவது சதத்தை தவற விட்ட கேப்டன் ஆன்டி பால்பிர்னி 95 ரன்களில் கேட்ச் ஆனார். பால் ஸ்டிர்லிங் (74 ரன்), லார்கன் டக்கெர் (78 ரன்) ஆகியோரும் அரைசதம் அடித்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்