< Back
கிரிக்கெட்
இரானி கோப்பை:  சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

இரானி கோப்பை: சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
1 Oct 2022 3:53 AM IST

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன.

ராஜ்கோட்,

2019-20-ம் ஆண்டு ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி தினசரி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

இரு அணி வீரர்கள் விவரம்:-

ரெஸ்ட் ஆப் இந்தியா:- மயங்க் அகர்வால், பிரியங் பாஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன், யாஷ் துல், சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால், ஹனுமா விஹாரி (கேப்டன்), சவுரப் குமார், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர், முகேஷ் குமார், உம்ரான் மாலிக், குல்தீப் சென், அர்சான் நாக்வஸ்வால்லா

சவுராஷ்டிரா:- பிரேரக் மன்கட், கிஷன் பர்மார், புஜாரா, அர்பித் வசவாடா, சமர்த் வியாஸ், சிராக் ஜானி, பார்த் புட், கம்லேஷ் மக்வானா, ஹர்விக் தேசாய், ஷெல்டன் ஜாக்சன், ஸ்னெல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட் (கேப்டன்), தர்மேந்திரசிங் ஜடேஜா, விஷ்வராஜ் ஜடேஜா, குஷாங் பட்டேல், சேத்தன் சக்காரியா.

மேலும் செய்திகள்