< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இரானி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்
|1 Oct 2023 1:59 AM IST
சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.
ராஜ்கோட்,
ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
ஹனுமா விஹாரி தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், சாய் சுதர்சன், நவ்தீப் சைனி, சர்ப்ராஸ்கான் உள்ளிட்ட வீரர்களும், ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் புஜாரா, ஹர்விக் தேசாய், ஷெல்டன் ஜாக்சன் உள்ளிட்ட வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.