< Back
கிரிக்கெட்
இரானி கோப்பை கிரிக்கெட்: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ரெஸ்ட் ஆப் இந்தியா...!
கிரிக்கெட்

இரானி கோப்பை கிரிக்கெட்: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ரெஸ்ட் ஆப் இந்தியா...!

தினத்தந்தி
|
5 March 2023 3:53 PM IST

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.

குவாலியர்,

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை சாம்பியன் மத்திய பிரதேசம்-இதர இந்தியா (ரெஸ்ட் ஆப் இந்தியா) அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 484 ரன்னும், மத்திய பிரதேச அணி 294 ரன்னும் எடுத்தன.

பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதத்தின் உதவியால் 246 ரன்கள் குவித்தது. இதையடுத்து மத்திய பிரதேச அணிக்கு 437 ரன்களை வெற்றி இலக்காக ரெஸ்ட் ஆப் இந்தியா நிர்ணயித்தது. தொடரந்து ஆடிய மத்திய பிரதேசம் 4ம் நால் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹிமான்ஷூ மந்திரி 51 ரன்களுடனும், ஹர்ஷ் காவ்லி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி ரெஸ்ட் ஆப் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் 5 பேர் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் அந்த அணி 58.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரானி கோப்பையை கைப்பற்றியது.ஆட்ட நாயகனாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மேலும் செய்திகள்