< Back
கிரிக்கெட்
மத்தியபிரதேசத்தில் இரானி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
கிரிக்கெட்

மத்தியபிரதேசத்தில் இரானி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
1 March 2023 3:30 AM IST

குவாலியரில் உள்ள கேப்டன் ரூப்சிங் ஸ்டேடியத்தில் இன்று முதல் 5-ந் தேதி வரை இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

குவாலியர்,

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை சாம்பியன் மத்தியபிரதேசம்-இதர இந்தியா (ரெஸ்ட் ஆப் இந்தியா) அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கேப்டன் ரூப்சிங் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.

மயங்க் அகர்வால் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஜெய்ஸ்வால், யாஷ் துல், பாபா இந்திரஜித், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். பயிற்சியின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மயங்க் மார்கண்டே விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக ஷம்ஸ் முலானி சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்தியபிரதேச அணியில் முன்னணி பேட்ஸ்மேன் ரஜத் படிதார், வழக்கமான கேப்டன் ஆதித்யா ஸ்ரீவத்சவா ஆகியோர் விலகியுள்ளனர். விக்கெட் கீப்பர் ஹிமன்ஷூ மந்திரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா, பேட்ஸ்மேன் யாஷ் துபே ஆகியோர் அந்த அணிக்கு வலுசேர்க்கிறார்கள். பலம் வாய்ந்த ரெஸ்ட் ஆப் இந்தியாவை சமாளிப்பது மத்தியபிரதேச அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்