இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ஹனுமா விஹாரி கேப்டன்
|இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
2019-20-ம் ஆண்டுக்கான ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இரானி கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. டெஸ்ட் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வருமாறு:-
ஹனுமா விஹாரி (கேப்டன்), மயங்க் அகரவால், பிரியங் பன்சால், அபிமன்யு ஈஸ்வரன், யாஷ் துல், சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், ஜெயந்த் யாதவ், சவுரப் குமார், சாய் கிஷோர், முகேஷ் குமார், உம்ரான் மாலிக், குல்தீப் சென், அர்சான் நவாஸ்வல்லா.