< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு..? - பஞ்சாப்புடன் நாளை மோதல்

Image Courtesy: @RCBTweets

கிரிக்கெட்

ஐ.பி.எல்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு..? - பஞ்சாப்புடன் நாளை மோதல்

தினத்தந்தி
|
24 March 2024 8:21 PM IST

நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பெங்களூரு உள்ளது.

பெங்களூரு,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள 6வது லீக் ஆட்டத்தில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூருவில் மோத உள்ளன.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக தோல்வி கண்டது. அதேவேளையில் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஆட்டம் பெங்களூரு அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பெங்களூரு உள்ளது.

அதேவேளையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் உள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்