ஐ.பி.எல்; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்..? - மும்பை - ஐதராபாத் அணிகள் நாளை மோதல்
|17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதேவேளையில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றிக்கு அருகில் வந்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி கண்டதால் நாளைய ஆட்டத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.