ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 92 ரன்கள் குவித்தார்.
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களும், ரஜத் படிதார் 55 ரன்களும் குவித்தனர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி 74 ரன்கள் அடித்திருந்தபோது ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 3 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
விராட் கோலி - 3 அணிகள் - சென்னை, டெல்லி, பஞ்சாப்
ரோகித் சர்மா - 2 அணிகள் - டெல்லி மற்றும் கொல்கத்தா
டேவிட் வார்னர் - 2 அணிகள்- கொல்கத்தா மற்றும் பஞ்சாப்