< Back
கிரிக்கெட்
ஐபிஎல்: கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த கோலி....அதிக சதம் பதிவு செய்த வீரர்கள் யார், யார்...?

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

ஐபிஎல்: கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த கோலி....அதிக சதம் பதிவு செய்த வீரர்கள் யார், யார்...?

தினத்தந்தி
|
19 May 2023 4:27 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

சென்னை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 65வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தரப்பில் ஹென்றிச் கிளாசெனும், பெங்களூரு தரப்பில் விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினர்.

நேற்று விராட் கோலி அடித்த சதம் ஐபிஎல் அரங்கில் அவர் பதிவு செய்யும் ஆறாவது சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கெயிலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆறு சதங்களை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2008 முதல் கோலி விளையாடி வருகிறார். மொத்தம் 236 போட்டிகள். அதில் 228 இன்னிங்ஸில் விளையாடி உள்ளார். 7,162 ரன்கள் பதிவு செய்துள்ளார். இதில் 50 அரை சதங்கள் மற்றும் 6 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் கடந்த 2016 சீசனில் மட்டுமே 4 சதங்களை கோலி பதிவு செய்திருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரர்கள் யார், யார்?

விராட் கோலி - 6

கிறிஸ் கெயில் - 6

ஜாஸ் பட்லர் - 5

கே.எல்.ராகுல் - 4

டேவிட் வார்னர் - 3

ஷேன் வாட்சன் - 3



மேலும் செய்திகள்