ஐ.பி.எல். வரலாற்றில் நெஹ்ராவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த டிரெண்ட் போல்ட்
|ஐ.பி.எல். தொடரில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஜெய்ப்பூர்,
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல்.ல் அவரது விக்கெட் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற ஆஷிஷ் நெஹராவின் சாதனையை (106 விக்கெட்) தகர்த்த போல்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. டிரெண்ட் போல்ட் - 107 விக்கெட்டுகள்
2. ஆஷிஷ் நெஹ்ரா - 106 விக்கெட்டுகள்
3, ஜாகீர் கான் -102 விக்கெட்டுகள்
4. ஜெய்தேவ் உடன்கட் - 91 விக்கெட்டுகள்
5. ஆர்.பி.சிங் -90 விக்கெட்டுகள்