< Back
கிரிக்கெட்
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் - 13 பேர் கைது
கிரிக்கெட்

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் - 13 பேர் கைது

தினத்தந்தி
|
2 May 2024 4:51 PM IST

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் , சென்னை - பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .

அதன்படி, சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல்.போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்