ஐ.பி.எல்.; ஏலத் தொகையை பார்த்து ஆச்சரியமடைந்தேன் - மிட்செல் ஸ்டார்க்
|கொல்கத்தா அணி மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மெல்போர்ன்,
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு விலை போய் இருக்கிறார். 33 வயதான ஸ்டார்க் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட் (10 ஆட்டம்) கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் ஏலம் குறித்து மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது,
உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார்.
ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லி விட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்.-ல் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன்'. இவ்வாறு அவர் கூறினார்.