< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். : பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக மாற்று வீரர் ராஜஸ்தான் அணியில் சேர்ப்பு

image courtesy:PTI

கிரிக்கெட்

ஐ.பி.எல். : பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக மாற்று வீரர் ராஜஸ்தான் அணியில் சேர்ப்பு

தினத்தந்தி
|
29 March 2024 2:43 AM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

ஜெய்ப்பூர்,

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு சீசனிலிருந்து விலகினார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்