< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடர்:  டைட்டில் ஸ்பான்சர் உரிமையை தக்கவைத்தது டாடா நிறுவனம்
கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடர்: டைட்டில் ஸ்பான்சர் உரிமையை தக்கவைத்தது டாடா நிறுவனம்

தினத்தந்தி
|
20 Jan 2024 12:30 PM IST

ஐ.பி.எல். தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்தது. இதில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்