< Back
கிரிக்கெட்
ஐபிஎல்: ரகானேவின் நீண்டநாள் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்
கிரிக்கெட்

ஐபிஎல்: ரகானேவின் நீண்டநாள் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்

தினத்தந்தி
|
6 April 2023 6:19 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. ர். அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் போட்டியில் அரை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம்சன் இந்த போட்டியில் எடுத்து 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை 3098 ரன்கள், சஞ்சு சாம்சன் , 3138* ரன்கள் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்