< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்பார்: பி.சி.சி.ஐ. அறிவிப்பு
கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்பார்: பி.சி.சி.ஐ. அறிவிப்பு

தினத்தந்தி
|
12 March 2024 2:48 PM IST

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட தகுதியானவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் 17-வது ஐ.பி.எல். தொடர் மூலம் மறுபிரவேசம் செய்வதற்காக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் 2024 ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தைத் தொடர்ந்து, 14-மாதம் மீட்பு செயல்முறைக்குப் பிறகு, வரவிருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட தகுதியானவராக அறிவிக்கப்பட்டுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்