ஐபிஎல்: பிராவோவை விடுவித்தது சென்னை அணி- வில்லியம்சனை விடுவித்த ஐதராபாத்
|சென்னை அணி அதன் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது.
மும்பை,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.
இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.
வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்துள்ளதால் விரைவில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடும் என தெரிகிறது.