ஐபிஎல்: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு..!
|10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த சீசனில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (பஞ்சாப்புக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
அதேவேளையில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி (டெல்லி, ஐதராபாத், பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்விகளுடன் (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக) 6 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.