< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல்; லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
|24 March 2024 3:05 PM IST
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஜெய்ப்பூர்,
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, மாலை 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோத உள்ளன.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் ராஜஸ்தான் - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.