ஐபிஎல்: குஜராத் அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்
|பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற மல்லுக்கட்டுகின்றன.
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர், பிரப்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான நிலையில், தவனும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மேத்தீவ் ஷார்ட் 36 ரன்கள் எடுத்தார். ராஜபக்ஷா 20 ரன்னும், சாம் கரன் 22 ரன்களும் எடுத்தனர். குஜராத் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர்.
இறுதியில் ஷாருக் கானின் சில பவுண்டரிகளின் உதவியுடன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.