< Back
கிரிக்கெட்
சென்னையில் ஐபிஎல் பிளே ஆப் போட்டி..! ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது
கிரிக்கெட்

சென்னையில் ஐபிஎல் பிளே ஆப் போட்டி..! ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது

தினத்தந்தி
|
17 May 2023 10:27 PM IST

பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ,

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் வரும் 23, 24ம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

.

மேலும் செய்திகள்