< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்: கொல்கத்தா அல்ல... இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்? - வெளியான தகவல்

image courtesy; @BCCI

கிரிக்கெட்

ஐ.பி.எல்: கொல்கத்தா அல்ல... இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
23 July 2024 10:38 AM IST

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

மும்பை,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர்.

மேலும், டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து கொல்கத்தா அணியில் கம்பீர் வகித்த ஆலோசகர் பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் அணுகியதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் டிராவிட் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்