< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்: சென்னை அணியுடன் இணைந்தார் முஸ்தபிசுர் ரஹ்மான்
கிரிக்கெட்

ஐ.பி.எல்: சென்னை அணியுடன் இணைந்தார் முஸ்தபிசுர் ரஹ்மான்

தினத்தந்தி
|
19 March 2024 5:20 PM IST

இது தொடர்பான புகைப்படத்தை சென்னை அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது

சென்னை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து தங்கள் வீரர்களை பயிறிசியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த பயிற்சி முகாம்களில் வீரர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் வங்காளதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்று சென்னை அணியுடன் இணைந்தார். இது தொடர்பான புகைப்படத்தை சென்னை அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாத அவரை பயிற்சியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்