< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்; மும்பை அபார பந்து வீச்சு - குஜராத் 168 ரன்கள் சேர்ப்பு

Image Courtesy: @IPL

கிரிக்கெட்

ஐ.பி.எல்; மும்பை அபார பந்து வீச்சு - குஜராத் 168 ரன்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
24 March 2024 9:21 PM IST

குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் சஹா 19 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். இதையடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் 31 ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சனுடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ஓமர்சாய் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மில்லர் 12 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 45 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து விஜய் சங்கர் மற்றும் ராகுல் திவேதியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்