< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்: ரோகித், தினேஷ் கார்த்திக் உடன் முதலிடத்தை பகிர்ந்த மேக்ஸ்வெல்

image courtesy:AFP

கிரிக்கெட்

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்: ரோகித், தினேஷ் கார்த்திக் உடன் முதலிடத்தை பகிர்ந்த மேக்ஸ்வெல்

தினத்தந்தி
|
11 April 2024 9:21 PM IST

ஐ.பி.எல். தொடரில் மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி ரன்களிலும், அடுத்ததாக களமிரங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த படிதார் - டு பிளிஸ்சிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர். படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த களமிறங்கிய மேக்ஸ்வெல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அவர் டக் அவுட் ஆவது 17-வது முறையாகும்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மாவுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. தினேஷ் கார்த்திக்/ ரோகித்/ மேக்ஸ்வெல் - 17 முறை

2. ரஷித் கான்/ பியூஷ் சாவ்லா/ சுனில் நரைன்/ மந்தீப் சிங் - 15 முறை

3. மனிஷ் பாண்டே/ ராயுடு - 14 முறை

மேலும் செய்திகள்