ஐ.பி.எல். வரலாற்றில் அதிகமுறை... ஆர்.சி.பி. அணியின் சாதனையை சமன்செய்த மும்பை இந்தியன்ஸ்
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக மும்பை 234 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 234 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி டெல்லி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் 200+ ரன்கள் அடித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணியின் ஒரு மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
ஐ.பி.எல். வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கெதிராக அதிகமுறை 200+ ரன்கள் அடித்த அணி என்ற ஆர்.சி.பி.-யின் சாதனையை சமன் செய்துள்ளது.
அந்த பட்டியல்:-
ஆர்.சி.பி. - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 முறை.
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 6 முறை.
மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் அதிகமுறை 200+ ரன்கள் அடித்த அணி என்ற சாதனை பட்டியலிலும் ஆர்.சி.பி. அணியுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளது.
அந்த பட்டியல்:-
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 29 முறை
2. ஆர்.சி.பி./ மும்பை இந்தியன்ஸ் - 24 முறை
3. பஞ்சாப் கிங்ஸ் - 22 முறை