< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல் மினி ஏலம்: அதிகபட்ச கையிருப்பு தொகை வைத்துள்ள குஜராத் அணி
|28 Nov 2023 3:49 AM IST
எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மும்பை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி துபாயில் நடக்கிறது. இதில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை வாங்குவதற்கு எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதில் அதிகபட்சமாக குஜராத் டைட்டன்சிடம் ரூ.38 கோடியே 15 லட்சமும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்சிடம் ரூ.14½ கோடியும் கையிருப்பு தொகை உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.31 கோடியே 40 லட்சமும், மும்பை இந்தியன்ஸ் ரூ.17¾ கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.23¼ கோடியும் ஏலத்தில் செலவிடலாம்.
இன்னும் 12 வீரர்களை நிரப்ப வேண்டி உள்ள கொல்கத்தா நைட் ரைடர்சிடம் ரூ.31 கோடியே 70 லட்சம் கையிருப்பு தொகை இருக்கிறது.