< Back
கிரிக்கெட்
ஐபிஎல் மினி ஏலம்:  அடிப்படை விலை ரூ. 2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாத சோகம்...!

Image Courtesy: IndianPremierLeague

கிரிக்கெட்

ஐபிஎல் மினி ஏலம்: அடிப்படை விலை ரூ. 2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாத சோகம்...!

தினத்தந்தி
|
2 Dec 2022 8:25 AM IST

ஐபிஎல் மினி ஏலத்தின் அடிப்படை விலை ரூ. 2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை.

மும்பை,

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது.

அதன்படி இந்த மினி ஏலத்தில் பதிவு செய்த முக்கியமான வீரர்களின் அடிப்படை விலைகளை பற்றி பார்ப்போம். இந்த ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் அதில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்கள்:- நாதன் கூல்டர் நைல், கேமரூம் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பாண்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரெக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கேன் வில்லியம்சன், ரீலி ரோசவ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்.

ரூ. 1.50 கோடி அடிப்படை விலை கொண்ட முக்கிய வீரர்கள்:- சீன் அப்போட், ரீலி மெரிடித், ஜை ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜேக்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், ஷெர்பேன் ரூதர்போர்ட்.

ரூ. 1 கோடி அடிப்படை விலை கொண்ட முக்கிய வீரர்கள்:- மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லுக் வுட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்டின் கப்தில், கைல் ஜேசிசன், மேட் ஹெண்ட்ரி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அகேல் ஹோசைன், டேவிட் வைஸ்.

இந்த அடிப்படை விலை பட்டியலில் ரூ. 2 கோடி, மற்றும் ரு. 1.50 கோடி பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 1 கோடி அடிப்படை விலையில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஏலத்தில் சென்னை அணி விடுவித்த பிராவே ஏலத்தில் பங்கு பெற பெயரை பதிவு செய்யவில்லை. மேலும், ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித், லபுஸ்சேன் ஆகியோரும் தங்களது பெயரை பதிவு செய்யவில்லை.

மேலும் செய்திகள்