< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை... 3-வது வீரராக மோசமான சாதனை பட்டியலில் இணைந்த மேக்ஸ்வெல்

image courtesy: twitter/@RCBTweets

கிரிக்கெட்

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை... 3-வது வீரராக மோசமான சாதனை பட்டியலில் இணைந்த மேக்ஸ்வெல்

தினத்தந்தி
|
23 March 2024 11:36 AM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் நேற்று தொடங்கியது. இதன் முதலாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் மேக்ஸ்வெல் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் என்ற மோசமான சாதனை பட்டியலில் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மாவுக்கு அடுத்த படியாக சுனில் நரின் மற்றும் மந்தீப் சிங்குடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. தினேஷ் கார்த்திக் - 17 முறை

2. ரோகித் சர்மா - 16 முறை

3. சுனில் நரின்/ மந்தீப் சிங்/ மேக்ஸ்வெல் - 15 முறை

மேலும் செய்திகள்