< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: மீண்டும் களத்திற்கு திரும்பிய மேக்ஸ்வெல்...ரசிகர்கள் மகிழ்ச்சி

image courtesy:PTI

கிரிக்கெட்

ஐ.பி.எல்.: மீண்டும் களத்திற்கு திரும்பிய மேக்ஸ்வெல்...ரசிகர்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
28 April 2024 3:38 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை அகமதாபாத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த ஆட்டத்தில் கடந்த சில போட்டிகளில் களம் இறங்காத நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவேளை தேவை என கூறி மேக்ஸ்வெல் சில போட்டிகளில் களம் காணவில்லை. இந்நிலையில் இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் களத்திற்கு திரும்பி உள்ளார். இவரது வருகை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்