< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல்.போட்டி அட்டவணையில் மாற்றம்
|2 April 2024 7:00 PM IST
ராம நவமி காரணமாக ஐ.பி.எல்.தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராம நவமி காரணமாக ஐ.பி.எல்.தொடரின் 2 போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அட்டவணை படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுவதாக இருந்தது .
இந்த நிலையில் ராமர் நவமியை முன்னிட்டு, 17-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா- ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி 16-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதேபோல ஏப்ரல் 16-ந் தேதியன்று நடைபெறவிருந்த குஜராத்- டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.