< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு
|3 April 2023 7:06 PM IST
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.
டோனி தலைமையிலான சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற தீவிரம் காட்டிவருகிறது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.