< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: பெங்களூருவை பின்னுக்கு தள்ளி சாதனை பட்டியலில் 3-வது இடம் பிடித்த கொல்கத்தா
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: பெங்களூருவை பின்னுக்கு தள்ளி சாதனை பட்டியலில் 3-வது இடம் பிடித்த கொல்கத்தா

தினத்தந்தி
|
22 May 2024 1:42 PM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் (குவாலிபயர் 1) ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 17 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 4-வது முறையாகும்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளின் சாதனை பட்டியலில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா 3-வது இடம் பிடித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறையுடன் முதலிடத்தில் உள்ளது.

அந்த பட்டியல்:-

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 முறை

2. மும்பை இந்தியன்ஸ் - 6 முறை

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 முறை

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3 முறை.

மேலும் செய்திகள்