< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய  லக்னோ...பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம்
கிரிக்கெட்

ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய லக்னோ...பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம்

தினத்தந்தி
|
30 March 2024 9:24 PM IST

லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாககுயின்டன் டி காக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த படிக்கல் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் டி காக் சிறப்பாக ஆடினார்.நிலைத்து ஆடி ரன்கள் குவித்த அவர் அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்கள் , குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர் .

பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.தொடர்ந்து 200 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.

மேலும் செய்திகள்