ஐ.பி.எல்; இலக்கை விரட்டும் போது தனிநபர் அதிகபட்சம்...புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ்
|லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார்.
சென்னை,
ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.
சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது ஐ.பி.எல் வரலாற்றில் இலக்கை விரட்டும் போது (ரன் சேசிங்கின்போது) தனிநபராக அதிகபட்ச ரன் எடுத்த வீரர் பட்டியலில் பால் வல்தாட்டி-யை (120 ரன் *) பின்னுக்கு தள்ளி ஸ்டோய்னிஸ் (124 ரன் *) முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ரன் சேசிங்கின் போது அதிகபட்ச ரன் அடித்த வீரர்கள் விவரம்;
1. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் - 124*, சென்னைக்கு எதிராக, சேப்பாக்கம், 2024*
2. பால் வல்தாட்டி - 120*, சென்னைக்கு எதிராக, மொஹாலி, 2011
3. வீரேந்திர சேவாக் - 119, டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிராக, ஐதராபாத், 2011.
4. சஞ்சு சாம்சன் - 119, பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிராக, மும்பை, 2021.
5. ஷேன் வாட்சன் - 117 *, ஐதராபாத்துக்கு எதிராக, மும்பை, 2018. (இறுதிப்போட்டி).