< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்; இந்த பையனின் ஆட்டத்தை பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை - டி வில்லியர்ஸ்

Image Courtesy: @RCBTweets

கிரிக்கெட்

ஐ.பி.எல்; இந்த பையனின் ஆட்டத்தை பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை - டி வில்லியர்ஸ்

தினத்தந்தி
|
20 March 2024 11:56 PM IST

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.

கேப்டவுன்,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் 2024 ஐ.பி.எல் சீசன்னில் 22 வயதாகும் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் பட்டாசு போல விளையாடி குறைந்தது 500 - 600 ரன்கள் அடிப்பார் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியதாவது,

இந்த பையனின் ஆட்டத்தை பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. அவர் தான் ஜெய்ஸ்வால். அவர் எந்தளவுக்கு தன்னை திறமையானவர் என்பதை டெஸ்ட் கிரிக்கெட்டில் காண்பித்துள்ளார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர் தன்னுடைய உண்மையான திறமையை காண்பிக்கும் நேரம் வந்துள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கிடைத்துள்ள பெரிய தன்னம்பிக்கையுடன் ஐ.பி.எல் தொடருக்கு வரும் அவரிடம் பட்டாசு போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன். எனவே இந்த சீசனில் குறைந்தது 500 அல்லது 600+ ரன்களை அவர் அடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்