< Back
கிரிக்கெட்
ஐபிஎல்: சென்னை அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - நியூசிலாந்து முன்னாள் வீரர்
கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - நியூசிலாந்து முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
24 Dec 2022 11:55 AM IST

16-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது.

வெல்லிங்டன்,

16-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகளும் சேர்த்து 163 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை எடுப்பதற்கான ஐபிஎல் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 135 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கல் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இருந்து 87 வீரர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தது. இதில் மொத்தம் 80 வீரர்களை மொத்தம் ரூ. 167 கோடி கொடுத்து அணி நிர்வாகங்கள் வாங்கின.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓய்வு பெற்ற டுவெய்ன் பிராவோ மாற்றாக ஒரு ஆல் ரவுண்டரை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அதே போல் தான் சென்னை அணியும் ஏற்கனவே அணியில் அங்கம் வகித்த சாம் கர்ரணை ஏலத்தில் எடுக்க கடும் முயற்சி செய்தது. ஆனால் அவரை பஞ்சாப் அணி 18.50 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

அவர் கிடைக்காததால் சென்னை அணி பென் ஸ்டோக்ஸ் மீது ஆர்வம் காட்டி அவரை 16.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து மற்ற அணி நிர்வாகங்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த பின் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் வீரரை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அணி நிர்வாகம் உள்ளது. அதற்கு தான் கடந்த சீசனில் ஆல் ரவுண்டர் ஜடேஜாவை கேப்டனாக முயற்சி செய்தனர். ஆனால் அது கைக்கூடவில்லை.

இந்நிலையில் இந்த ஏலத்தில் எடுத்த பென் ஸ்டோக்சை அந்த அணி இந்த ஆண்டே கேப்டனாக நியமித்து முயற்சி செய்ய வேண்டும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் என்ன நினைக்கிறேன் என்றால் பென் ஸ்டோக்ஸ் தான் கேப்டானாக இருப்பார் என நினைகிறேன். தோனி கேப்டன் பதவியை வேற ஒருவரிடம் கொடுக்க நினைப்பதை நாம் முன்னரே பார்த்திருக்கிறோம். அவர் ஐபிஎல்லை தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில்லை. எனவே இது அவருக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கேப்டன் பதவியை மாற்றுவதற்கு. ஆம், அவர்கள் இதை உடனடியாக செய்வார்கள் என நினைக்கிறேன். பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்