< Back
கிரிக்கெட்
நெருக்கடியான சூழலில் அமைதியாக இருப்பதற்கான நம்பிக்கையை ஐபிஎல் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது - ரிங்கு சிங்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

நெருக்கடியான சூழலில் அமைதியாக இருப்பதற்கான நம்பிக்கையை ஐபிஎல் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது - ரிங்கு சிங்

தினத்தந்தி
|
3 Dec 2023 4:56 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

பெங்களூரு,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 4-வது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நெருக்கடியான சூழலில் அமைதியாக இருப்பதற்கான நம்பிக்கையை ஐபிஎல் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். ஐ.பி.எல். எனக்கு நம்பிக்கை அளித்தது. நெருக்கடியான நிலையில் அமைதியாக இருக்க ஐ.பி.எல். எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

உடற்பயிற்சி கூடத்துக்கு தினசரி சென்று பளுதூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன். இந்த உடற்பயிற்சியால் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிப்பதற்கான ஆற்றல் எனக்கு கிடைக்கிறது. இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

மேலும் செய்திகள்