< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்; சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: @IPL

கிரிக்கெட்

ஐ.பி.எல்; சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
26 March 2024 7:05 PM IST

சென்னை அணிக்கு ருதுராஜ் கேப்டனாகவும், குஜராத் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.

சென்னை,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன.

இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளும் தங்களது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்