ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிராக குஜராத் பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
குஜராத் :
விருத்திமான் சாஹா, சுப்மன் கில், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா ஒமர்சாய், ராகுல் தெவாட்டியா, ஷாருக்கான், ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர்
டெல்லி:
பிருத்வி ஷா, ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்