< Back
கிரிக்கெட்
சென்னை-டெல்லி ஆட்டத்துக்கான ஐ.பி.எல். டிக்கெட் விற்று தீர்ந்தது
கிரிக்கெட்

சென்னை-டெல்லி ஆட்டத்துக்கான ஐ.பி.எல். டிக்கெட் விற்று தீர்ந்தது

தினத்தந்தி
|
9 May 2023 1:53 AM IST

ஆன்லைன் மூலமாக நடந்த டிக்கெட் விற்பனையும் சில மணி நேரங்களில் விற்று காலியானது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்குள் ரூ.1,500, ரூ.2000, ரூ.2,500 ஆகிய விலைகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தன.

இதேபோல் ஆன்லைன் மூலமாக நடந்த டிக்கெட் விற்பனையும் சில மணி நேரங்களில் விற்று காலியானது.

மேலும் செய்திகள்