ஐபிஎல் இறுதிப்போட்டி: தோனி டக் அவுட் ஆன பின் சாக்ஷி தோனியின் ரியாக்ஷன் - வீடியோ...!
|குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் எம்.எஸ்.தோனி டக் அவுட் ஆனார்.
அகமதாபாத்,
16வது ஐபிஎல் சீசனின் இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் சாய் சுதர்சனின் அபார ஆட்டத்தால் 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை அணி இலக்கை விரட்டிய போது மழை பெய்ததால் டிஎல்எஸ் முறைப்படி சென்னைக்கு 15 ஓவர்களில் 171 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இந்த இன்னிங்சின் போது பேட்டிங்கில் களம் இறங்கிய சென்னை கேப்டன் தோனி தான் சந்தித்த மொகித் சர்மாவின் முதல் பந்திலேயே டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அவர் ஆட்டம் இழந்த பின்னர் அவரது மனைவி சாக்ஷி தோனியின் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.