< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்
கிரிக்கெட்

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்

தினத்தந்தி
|
26 May 2024 6:25 PM IST

இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இதனையடுத்து நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.இந்த நிலையில் இறுதிப்போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி அதிக அளவிலான ரசிகர்கள் உற்சாகத்துடன் படையெடுத்து வருகின்றனர். மேலும் மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்