
ஐ.பி.எல்: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் இரவு நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி:
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
சென்னை:
ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான்