< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

image courtecy:twitter@IPL

கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

தினத்தந்தி
|
7 May 2024 11:28 PM IST

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களில் அவுட்டானார்.

டெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ப்ரேசர்-மெக்கர்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக பொரேல் 65 ரன், ப்ரேசர் மெக்கர்க் 50 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் பட்லர் 19 ரன்களிலும் அவுட்டானார்கள். பின்னர் சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களிலும் பராக் 27 ரன்களிலும் அவுட்டானார்கள். பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின.

முடிவில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களும் ரியான் பராக் 27 ரன்களும் சுபம் துபே 25 ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், கலீல் அஹமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.


மேலும் செய்திகள்